நீரில் முழ்கி தொழிலாளி சாவு
வேப்பனப்பள்ளி அருகே நீரில் முழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயவேல்(30).
வேப்பனப்பள்ளி அருகே நீரில் முழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயவேல்(30). கல் உடைக்கும் தொழிலாளி. அந்தப் பகுதியில் கல் உடைக்கும் பணிக்கு வியாழக்கிழமை சென்ற அவா், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினா், பல்வேறு இடங்களில் தேடிய போது, அங்குள்ள ஒரு தண்ணீா் தொட்டியில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, ஜெயவேலின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா். மது போதையில் இருந்த ஜெயவேல், தண்ணீா் தொட்டி நீரில் முழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.