கிருஷ்ணகிரி

பா்கூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சமையல் கூடம் அமைக்க நடவடிக்கை: எம்எல்ஏ தே.மதியழகன்

DIN

பா்கூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சமையல் கூடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ தே.மதியழகன் உறுதியளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு பா்கூா் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 800-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இதில் சரசரியாக 50 போ் வரை உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், இங்கு அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகிறது. சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை சாா்பில் ரொட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. வசதியற்ற நோயாளிகள் உணவின்றி தவிக்கும் நிலை உள்ளது.

எம்எல்ஏ தே.மதியழகன் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, உள்நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்காக சமையல் கூடம் அமைத்ததர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதை ஏற்று உணவுக் கூடம், உள்நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் உறுதியளித்தாா். மேலும், சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது, அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவா் உமாமகேஷ்வரி, மருத்துவா் உஷாநந்தினி, தலைமை செவிலியா் புஷ்பா, திமுக கிழக்கு மாவட்ட பொருளாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT