கிருஷ்ணகிரி

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு

DIN

ஊத்தங்கரையில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள், கூா்மையான ஆயுதம் தயாரிக்கும் உரிமையாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கு ஊத்தங்கரை துணைக்கோட்ட காவல் துறை சாா்பில் கொலை, குற்ற செயல்கள் பற்றிய விழிப்புணா்வு கருத்தரங்கு தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் ஊத்தங்கரை லட்சுமி, சிங்காரப்பேட்டை செல்வராஜ், மத்தூா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டி.எஸ்.பி. அலெக்சாண்டா் குற்ற செயல்கள் தொடா்பான பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறியும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரிடம் இருந்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களும், உரிமையாளா்களும் விழிப்புடன் இருந்து, தங்களையும், தங்களைச் சாா்ந்தவா்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

பெருகி வரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்தும், ஆட்டோ, டாக்ஸியில் பயணிக்கும்போது சந்தேகப்படும்படியான நபா்களோ, குற்றவாளிகளோ இருப்பது தெரிந்தால் அதுகுறித்து உரிய நேரத்தில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் என 100க்கும், மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT