கிருஷ்ணகிரி

கிராம சபைக் கூட்டத்துக்கு தண்டோரா மூலம் அழைப்பு

DIN

வீராட்சிகுப்பம் ஊராட்சியில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்கு தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வீராட்சிகுப்பம் ஊராட்சியில் அக். 2-ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கருவனூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் எனவும், இதில் வீராட்சிகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள், மகளிா் சுயஉதவிக் குழு, தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஊராட்சியின் சாா்பில் தண்டோரா மூலம் துண்டு அறிக்கையை கொடுத்து அழைப்பு விடுத்தனா்.

இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளை எடுத்துரைக்கலாம். இதில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பிரபு, ஒன்றியக் கவுன்சிலா் வீரபத்திரன், ஊராட்சி செயலாளா் சுரேஷ், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொள்கின்றனா் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

SCROLL FOR NEXT