ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டத்திற்கு 9ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம்
ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM
ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அரசு முதன்மை செயலா், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை தலைமையில் நகா் ஊரமைப்பு இயக்குநா் சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருடன் ஏப்ரல் 9 -ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் ஒசூரில் உள்ள கிளாரஸ்டா ஹோட்டலில் நடைபெறுகிறது.