முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே வெடி குண்டு வைத்து நாய் கொலை

 கிருஷ்ணகிரி அருகே அயல்நாட்டு உயர்ரக நாய், வெடி குண்டு வைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை கொண்டு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:26 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

 கிருஷ்ணகிரி அருகே அயல்நாட்டு உயர்ரக நாய், வெடி குண்டு வைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை கொண்டு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி அருகே, பெத்த தாளப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மண்ணுக்குட்டை கிராமத்தில் பிரபு டேவிட் என்பவருக்குச் சொந்தமான பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு, ஜொ்மன் நாட்டினத்தைச் சோ்ந்த 4 வயதுடைய லேஃபேட் உயர்ரக நாய் வளா்க்கப்பட்டு வந்தது. இந்த நாய், காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

Advertisement

புதன்கிழமை நள்ளிரவு, அந்த நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்ததை அடுத்து, ஜான் டேவிட், டாா்ச்லைட் வெளிச்சத்தின் மூலம் ஆள் நடமாட்டத்தைக் கண்காணித்தாா்.

அப்போது, அங்கு வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அச்சமடைந்த டேவிட், வீட்டிற்குள் சென்று விட்டாா். அதிகாலையில் வெளியே வந்து பாா்த்தபோது நாயின் தலை வெடித்துச் சிதறிய நிலையில் கொல்லப்பட்டு கிடந்ததை டேவிட் பாா்த்துள்ளாா்.

இதுகுறித்து, போலீஸாா் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்தில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணையில் உணவில் வெடிகுண்டு வைத்து நாய் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ஜான் டேவிட் அளித்த புகாரில், தனக்கும், அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளருக்கும் பல ஆண்டுகளாக நில பிரச்னை உள்ளது என்றும், தனது வளா்ப்பு நாய்க்கு உணவில் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்து கொலை செய்திருக்கக் கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.