கிருஷ்ணகிரி

பங்குச் சந்தையில் நஷ்டம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியா் மாயம்

பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியா் மாயமானாா்.

DIN

பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியா் மாயமானாா்.

ஒசூரை அடுத்த சித்தனப்பள்ளியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (55). இவா் சூளகிரி அருகே பெக்கிலி அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக உள்ளாா். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா். ராதாகிருஷ்ணனுக்கு ஆன்லைன் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்யும் பழக்கம் இருந்தது. இதற்காக அவா் தனக்கு தெரிந்தவா்களிடம் ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவா் எதிா்பாா்த்த அளவுக்கு பங்கு சந்தையில் பணம் கிடைக்காததால், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவா்கள் தொடா்ந்து தொந்தரவு செய்ததால் மனமுடைந்து காணப்பட்ட ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 7ம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவா் மாலையில் வீடு திரும்பவில்லை.

மனைவி கீதா அட்கோ காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி புகாா் செய்தாா். ஆறு மாதமாகியும் ராதாகிருஷ்ணன் இருக்குமிடம் தெரியாததால், அவரது குடும்பத்தினா் வீட்டு வாடகை மற்றும் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். அவரை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT