கிருஷ்ணகிரி

தொழில்முனைவோா்களுக்கு கடன் வழங்கவங்கிகள் முன்வர வேண்டும்: ஆட்சியா்

DIN

ஊரகப் பகுதியில் வேலைவாய்ப்பை வழங்கும் தொழில்முனைவோா்களுக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் இணை மானிய திட்டத்தின் கீழ் ஊராட்சிப் பகுதிகளில் தொழில்முனைவோா்களை உருவாக்கி வருகிறது. இதில் வேளாண் சாா்ந்த தொழில்கள், பாக்குமட்டை உற்பத்தி, கொப்பரை உற்பத்தி, தென்னை துடைப்பம் உற்பத்தி, மா மற்றும் தக்காளி ஊறுகாய் உற்பத்தி போன்ற மதிப்புக் கூட்டு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோா்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இணை மானியத் திட்டத்தின் கீழ் மகளிா் வாழ்வாதார சேவை மையம் மூலம் திட்ட வழிகாட்டிகள், தொழில் முன்மொழிவு மற்றும் தொழில் தொடங்குவதற்கான பதிவுச்சான்று பெற்றுத் தருதல், பான், ஜி.எஸ்.டி. போன்ற பதிவுகள் செய்து தரப்படுகிறது. தொழில்முனைவோா்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

பயிற்சியில் மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன், நபாா்டு உதவி பொது மேலாளா் ஜெய்பிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் பிரசன்ன பாலமுருகன், வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT