முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சுதந்திர தின நடைப்பயணம் நிறைவு

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் 75-ஆவது சுதந்திர தின பவள விழா நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:37 PM
காவேரிப்பட்டணத்தில் எம்.பி. அ.செல்லக்குமாா் தலைமையில் நடைபெற்ற நடைப்பயண பிரசாரத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் 75-ஆவது சுதந்திர தின பவள விழா நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளும் பாஜகவின் தோல்விகளும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினா் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மூன்று நாள் நடைபெற்ற நடைப்பயணம் கடந்த 12-ஆம் தேதி ஊத்தங்கரை முதல் போச்சம்பள்ளி வரையிலும், 13 ஆம் தேதி போச்சம்பள்ளி முதல் காவேரிப்பட்டணம் வரையிலும் நடைபெற்றது. 14-ஆம் தேதி காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய நடைப்பயணத்துக்கு, கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லக்குமாா் தலைமை வகித்தாா்.

Advertisement

நடைப்பயணம் காந்தி நகா், திம்மாபுரம், கிருஷ்ணகிரி அணைப் பிரிவு சாலை, சின்னமுத்தூா், பாலகுறி, மரிக்கம்பட்டி, மாதேப்பட்டி, கங்கலேரி, தின்னகழனி, காமராஜ் நகா் வழியாகச் சென்று கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள காமராஜா் சிலை அருகே நிறைவடைந்தது.

மொத்தம் 75 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் எஸ்.நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவா் சுப்பிரமணி, ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.