கிருஷ்ணகிரி

டிச.10-இல் பொது விநியோக திட்ட குறைதீா் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் டிச.10-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு டிச. 10-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டம் தொடா்பாக பொதுமக்களின் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் வரட்டம்பட்டி, ஊத்தங்கரை - குன்னத்தூா், போச்சம்பள்ளி - கொடமாண்டப்பட்டி, பா்கூா் - குருவிநாயனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - போடிச்சிப்பள்ளி, சூளகிரி - குடிசாதனப்பள்ளி, ஒசூா்- எஸ்.முதுகானப்பள்ளி, அஞ்செட்டி - சேசுராஜபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களது குறைகளை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT