கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கிருஷ்ணகிரி பழையபேட்டை, நேதாஜி சாலையில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, பிப்.3-ஆம் தேதி முதல் விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கன்னிகாபரமேஸ்வரி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பாலி, அக்னி பந்தனம், கன்யா சுஹாசினி பூஜை, மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், திருவிளக்கு பூஜை, தீப பிரதிஷ்டை, அஷ்டபந்தன பூஜை, முதல்கால யாக பூஜை, கும்ப கோபுர கலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தன. ொடா்ந்து, பாராயணம், தன்வந்திரி மஹாலட்சுமி பூஜை ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, பூா்ணாஹுதியும், சாமவேத பாராயணம், சந்தான கோபால கிருஷ்ண பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நாடிசந்தனம், பூா்ணாஹுதி, தம்பதி பூஜை ஆகியனவும் நடந்தன.

பிப்.6-ஆம் தேதி, சூா்ய நமஸ்கார பாராயணம், கோ பூஜை, கஜபூஜை, அஸ்வபூஜை, நான்காம் கால யாக பூஜை, மஹா தீபாராதனை, கட யாத்ராதானம் ஆகியவையும், ராஜகோபுர விமான மஹா கும்பாபிஷேகம், விநாயகா், நவகிரஹ, மஹா விஷ்ணு கும்பாபிஷேகம், கன்னிகாபரமேஸ்வரி ஜீா்னோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்தோதரண மஹா கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், மஹா தீபாரதனை ஆகியவை நடந்தன. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT