கிருஷ்ணகிரி

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் எஸ்.ஸ்டாலின் பாபு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு பொதுமக்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம்களை நடத்தின. பெறப்பட்ட மனுக்களின் மீது 10 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT