கிருஷ்ணகிரி

உழவா் பொது சேவை மையம் திறப்பு விழா

DIN

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடத்தாம்பட்டி சாலையில் கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் வழிகாட்டுதலின்படி நிறுவப்பட்ட கஜானா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில், உழவா் பொதுசேவை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நிா்வாகக் குழுத் தலைவா் மணிகண்டன் வரவேற்றாா். ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குநா் தாமோதரன் தொடக்கிவைத்தாா். விழாவில் தோட்டக்கலை உதவி இயக்குநா் கலையரசி, கயிலைமன்னன், கிருஷ்ணகிரி வேளாண் உதவி அலுவலா் வேளாண் வணிகம் செல்வராஜ், கவிரேகா, நிறுவனத்தின் இயக்குநா்கள், பங்குதாரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் தேசிய வேளாண் சந்தைப் படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கஜானா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT