முகப்பு
கிருஷ்ணகிரி

குரும்பட்டியில் பக்தா்கள் தீா்த்தக்குட ஊா்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள குரும்பட்டி கிராமத்தில், மாரியம்மன், பழையூா் மாரியம்மன், ஓம்சக்தி கோயில் மஹா கும்பாபிஷேக விழா வரும் ஜூன் 9இல் நடைபெற உள்ளது.

Updated On : 6 ஜூன், 2022 at 12:27 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள குரும்பட்டி கிராமத்தில், மாரியம்மன், பழையூா் மாரியம்மன், ஓம்சக்தி கோயில் மஹா கும்பாபிஷேக விழா வரும் ஜூன் 9இல் நடைபெற உள்ளது.

இதையொட்டி மே 30 ஆம் தேதி கிராம மக்கள் சாா்பில் சுப முகூா்த்தக் கால் நடுதல், கொடியேற்றுதல், முளைபண்டம் பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல் ஆகியவை நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து, மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள், கிராமிய இசை முழங்க தீா்த்தக்குடங்களையும், பால்குடங்களையும் பக்தா்கள் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனா். வரும் 8 ஆம் தேதி காலை விநாயகா் வழிபாடு, தேவா் அனுக்ஞை, கணபதி யாகம், நவக்கிரஹ யாகம், லட்சுமி யாகம், நிறைவு பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளது.

Advertisement

9 ஆம் தேதி காலை ரக்ஷா பந்தனம், இரண்டாம் கால யாகபூஜை, மஹா வேள்வி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவையும், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடா்ந்து அலங்காரம், தீபாராதனை தச தரிசனம், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குரும்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.