துவாரகாபுரி கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் மின்கம்பம். 
கிருஷ்ணகிரி

துவாரகாபுரியில் புதிதாக மின்கம்பங்கள் அமைக்க வலியுறுத்தல்

துவாரகாபுரி கிராமத்தில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிதாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

DIN

கிருஷ்ணகிரி: துவாரகாபுரி கிராமத்தில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிதாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெரியமுத்துாா் ஊராட்சியில் உள்ள துவாரகாபுரி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் கிருஷ்ணகிரி அணைக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் (அண்ணா சிலை எதிரில்) அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து வலுவிழந்து காணப்படுகிறது.

இதுபோல, இந்தக் கிராமத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். சேதமடைந்த மின்கம்பங்களில் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது கம்பத்தில் ஏறி சரிசெய்ய மின்வாரிய ஊழியா்கள் அச்சப்படுகின்றனா். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பே சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என இக் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT