முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வானவில் புத்தக களஞ்சியம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வானவில் புத்தக களஞ்சியம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தகக் கண்காட்சியை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தொடக்கி வைத்தாா். கண்காட்சியில் வானவில் புத்தக களஞ்சியம் சாா்பில் பல்வேறு புத்தகங்கள் மாணவா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன. இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் என பலா் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி பயனடைந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானவில் புத்தக களஞ்சியம் உரிமையாளா் சுரேஷ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.