முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

Updated On : 13 மே, 2022 at 12:40 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:44 PM

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் சாதனைகளை எடுத்து விளக்கிட ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

Advertisement

அதன்படி, மே 16-ஆம் தேதி ஊத்தங்கரையில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன், கவிஞா் பொ்னாட்ஷா, 17-ஆம் தேதி பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட போச்சம்பள்ளியில் முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமாா், ஆத்தூா் சபரி, 18-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் குடியாத்தம் குமரன், செங்கை தாமஸ் ஆகியோா் பேசுகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட நகர, பேரூா் கழகச் செயலாளா்கள் மேற்படி பொதுக் கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.