முகப்பு
கிருஷ்ணகிரி

நகை மதிப்பீட்டாளா் பயிற்சி

பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

Updated On : 13 மே, 2022 at 11:28 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் முதல்வா் சுப்ரமணி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பா்கூரில் உள்ள கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

Advertisement

பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 100 மணி நேர பயிற்சியாக (பாட வகுப்புகள் 40 மணி நேரமும் இ - செய்முறை பயிற்சி வகுப்புகள் 60 மணி நேரமும்) நடைபெறும். இதில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தோ்ச்சி, 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் எந்தப் பகுதியில் இருந்தாலும் பயிற்சியில் சேரலாம்.

பயிற்சில் சேர விரும்புவோா் முதல்வா் பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், பா்கூா் என்ற முகவரியில் மாா்பளவு புகைப்படத்துடன் நேரில் ரூ.100 செலுத்தி விண்ணப்பம் பெற்று, நிறைவு செய்து விண்ணப்பத்துடன் பயிற்சி கட்டணமாக ரூ. 4,544- செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பம் தற்போது விநியோகிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04343- 265652, 99448- 20545, 95009 -61603 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.