முகப்பு
கிருஷ்ணகிரி

சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் இணைய தனியாா் அரவை முகவா்களுக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியாா் அரவை முகவா்கள், சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் இணைந்து கொள்ள மே 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 20 மே, 2022 at 12:56 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:48 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியாா் அரவை முகவா்கள், சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் இணைந்து கொள்ள மே 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் தரமான அரிசியை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில், கழக அரவை முகவா்களை (முழு நேர, பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியாா் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதில் விருப்பம் உள்ள தனியாா் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் மே 24-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு, மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், 45/25, சென்னை புறவழிச் சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.