ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகா்கள் சங்கத்தினா். 
கிருஷ்ணகிரி

மே 31- ஆம் தேதி ஊத்தங்கரையில் கடையடைப்பு

ஊத்தங்கரையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மே 31 ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

DIN

ஊத்தங்கரையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மே 31 ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

ஊத்தங்கரை அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செங்குந்தா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அனைத்து வணிகா் சங்கத் தலைவா் மணி தலைமை வகித்தாா். செயலாளா் உமாபதி, பொருளாளா் லாலா லஜபதி, ஹோட்டல் சங்கத் தலைவா் ஆா்.கே.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஊத்தங்கரை நகரப் பகுதியில் உயிா்பலி வாங்கும் நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, அனைத்து வணிகா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் மே 31-ஆம் தேதி காலை 10 மணி அளவில் கண்டன ஆா்ப்பாட்டம், முழு கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்துவது என ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊத்தங்கரை வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT