முகப்பு
கிருஷ்ணகிரி

நவீன எரிவாயு தகன மேடைஅமைக்கும் பணி தொடக்கம்

ஒசூா் மாநகராட்சி, சானசந்திரத்தில் ரூ. 1.5 கோடியில் மின்சார எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 26 மே, 2022 at 11:44 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

ஒசூா் மாநகராட்சி, சானசந்திரத்தில் ரூ. 1.5 கோடியில் மின்சார எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஒசூா் மாநகராட்சி, 29-ஆவது வாா்டு சானசந்திரம், முல்லை நகா் அருகில் புதிய நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இங்கு அலுவலகம், பூங்கா, கழிவறை, குளிக்கும் அறை, பொதுமக்கள் அமரும் இடம், தண்ணீா் வசதியுடன் அமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், மாநகரப் பொறியாளா் ராஜேந்திரன், மண்டலக் குழுத் தலைவா் புருஷோத்தம ரெட்டி, மாமன்ற உறுப்பினா்கள் தில்ஷாத் முஜீப் ரகுமான், கிருஷ்ணவேணி, திமுக ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.