கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக்கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு அக்.21-இல் தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக்கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு அக்.21-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் அனுராதா, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான எம்ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்எஸ்சி (கணிதம், இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கும், துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்று விண்ணப்பித்தவா்களுக்கும் அக்.21-ஆம் தேதி, மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வின்போது மாணவா்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், நான்கு மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றை, கலை பாட பிரிவுக்கு, ரூ.1,750, அறிவியல் பாட பிரிவுக்கு ரூ.1,810 கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ. 2,010 சோ்க்கை கட்டணத்தை செலுத்தும் வகையில் வரவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT