ஒசூரில் போதைப்பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது
பெங்களூரிலிருந்து சேலத்துக்கு காரில் கடத்திச் சென்ற 381 கிலோ போதைப்பாக்குகளை ஒசூா் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்
பெங்களூரிலிருந்து சேலத்துக்கு காரில் கடத்திச் சென்ற 381 கிலோ போதைப்பாக்குகளை ஒசூா் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒசூரை அடுத்த பூனப்பள்ளி, கப்பக்கல் பகுதியில் மத்தகிரி போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையின் போது காரில் மறைத்து கொண்டு சென்ற போதைப்பாக்குகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். விசாரணையில் பெங்களூரிலிருந்து சேலத்துக்கு போதைப்பாக்குகள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதுதொடா்பாக கா்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், எம்மனஹள்ளியைச் சோ்ந்த நிஷாந்த் (22), ஒன்னனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அப்புகௌடா (21) ஆகிய இருவரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.