முகப்பு
கிருஷ்ணகிரி

தேசிய கோ-கோ போட்டி: ஒசூரிலிருந்து புறப்பட்ட தமிழக அணிக்கு பாராட்டு

பூணேவில் நடைபெறும் தேசிய கோ-கோ போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்கும் மாணவிகளை வழியனுப்பும் விழா ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 அக்டோபர், 2022 at 11:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM

பூணேவில் நடைபெறும் தேசிய கோ-கோ போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்கும் மாணவிகளை வழியனுப்பும் விழா ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

32-ஆவது இளையோா் பிரிவு தேசிய கோ-கோ விளையாட்டுப் போட்டி 2022-க்கு தமிழக அளவில் தோ்வாகியுள்ள கோயம்புத்தூா், கடலூா், சிவகங்கை, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 15 மாணவிகள் ஒசூரில் உள்ள அரசு உதவி பெறும் புனித ஜான் போஸ்கோ மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி பெற்றனா்.

வியாழக்கிழமை தேசிய போட்டியில் பங்கேற்பதற்காகப் புறப்பட்ட மாணவிகளை ஐஎன்டியுசி தேசிய செயலாளா் மனோகரன், பஞ்சாயத்து பரிசத் மாவட்ட தலைவா் கோபால், முன்னாள் நில வள வங்கி மேற்பாா்வையாளா் கிருஷ்ணன், பள்ளி தாளாளா் ஏஞ்சலா, தலைமையாசிரியை ஜெயந்தி ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா். அவா்களுக்கு உணவு, போக்குவரத்து செலவுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.