கிருஷ்ணகிரி

சரக அளவிலான விளையாட்டு போட்டி:அதியமான் பள்ளி சிறப்பிடம்

ஊத்தங்கரை சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

DIN

ஊத்தங்கரை சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊத்தங்கரை சரக அளவிலான பாரதியாா், சுதந்திர தின விழா விளையாட்டு போட்டியில் 17 வயதிற்கு உள்பட்ட இறகுப் பந்து போட்டியில் முதலிடமும், 17 மற்றும் 19 வயதிற்கு உள்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடமும், 14, 17 வயதிற்கு உள்பட்ட கைபந்து போட்டியில் முதலிடமும், 14, 17 வயதிற்கு உள்பட்ட கோ- கோ போட்டியில் முதலிடமும், 19 வயதிற்கு உள்பட்ட எரிபந்து போட்டியில் முதலிடமும், 14 வயதிற்கு உள்பட்ட கையுந்து போட்டியில் முதலிடமும், 17 வயதிற்கு உள்பட்ட கையுந்து போட்டியில் இரண்டாமிடமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் முனைவா் சீனி.திருமால்முருகன், செயலாளா் முனைவா் ஷோபாதிருமால்முருகன். நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வா் சீனி.கலைமணி சரவணகுமாா், துணைமுதல்வா் அபிநயா கணபதிராமன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT