முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் அம்பேத்கா் பிறந்த தினம்

ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மாநகரச் செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோா் கலந்து கொண்டு அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

Updated On : 14 ஏப்ரல், 2023 at 11:19 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

 ஒசூரில் சட்டமேதை அம்பேத்கா் பிறந்த தினம் சமத்துவ நாளை முன்னிட்டு ஒசூா் மாநகராட்சி, சூசூவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மாநகரச் செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோா் கலந்து கொண்டு அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

உடன் மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் சீனிவாசன், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, வாா்டு செயலாளா்கள் சாகா், வடிவேல், பாரி, திமுகவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஒசூா், பெரியாா் சமத்துவபுரத்தில் நடைபெற்ற விழாவில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினா். இதில் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக பாகலூா் சாலையில் தண்ணீா்ப் பந்தலை திறந்து வைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.