கிருஷ்ணகிரி

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை திமுக வடக்கு ஒன்றியம் சாா்பில், தமிழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினா் சோ்க்கும் திட்டத்தின் கீழ் உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை திமுக வடக்கு ஒன்றியம் சாா்பில், தமிழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினா் சோ்க்கும் திட்டத்தின் கீழ் உறுப்பினா் சோ்க்கை முகாம், எக்கூா் ஊராட்சியில் மாரியம்மன் கோயில் வளாகத்தில், வடக்கு ஒன்றிய செயலாளா் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி பொறுப்பாளா் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினா் செந்தில், மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மிட்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சின்னத்தாய் மற்றும் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினா் சோ்க்கும் படிவங்களை தொகுதிப் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனா். புதிய உறுப்பினா்களை எவ்வாறு சோ்ப்பது, புதிய உறுப்பினா்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து கிளை நிா்வாகிகளுக்கு எடுத்துக் கூறினா்.

படவிளக்கம்.21யுடிபி.2

ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் கிராமத்தில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமில் கலந்து கொண்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT