கிருஷ்ணகிரி

ஒசூா் வழியாக கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

DIN

ஒசூா் வழியாக கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா் தினேஷ்குமாா் மற்றும் போலீஸாா் பெங்களூரு ஒசூா் தேசிய நெடுஞ்சாலை சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்தக் காரில் 149 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.96 ஆயிரத்து 600 ஆகும். புகையிலைப் பொருட்களையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அதை கடத்தி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம், கண்ணன்குடியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு அவற்றைக் கடத்த இருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை...

இராஜ ராஜ சோழன்

1919-ல் இது நடந்தது: ஸாதத் ஹஸ்ஸன் மாண்ட்டோ சிறுகதைகள்

மேற்கு வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT