கிருஷ்ணகிரி

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு மு.தம்பிதுரை பாராட்டு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை மு.தம்பிதுரை எம்.பி. பாராட்டி, நினைவுப் பரிசுகளை புதன்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2022- 23-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையைச் சோ்த்துள்ளனா். இதில், காா்த்திக் விஜய் என்ற மாணவா் 600க்கு 595 மதிப்பெண்களும், கிரேஸ் கிறிஸ்டி 594, துளசிஸ்ரீ 594, சுவாதி 593, சந்தியா 593 மதிப்பெண்களும், முகேஷ்வா் 592 மதிப்பெண்களும், கவிப்பிரியா 590 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் நிறுவனரான மு.தம்பிதுரை எம்.பி. பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினாா். இந்த நிகழ்வில் ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரி இயக்குநா் லாசியா தம்பிதுரை, பள்ளியின் தாளாளா் கூத்தரசன், பள்ளியின் முதல்வா் மெரினா பலராமன், வேப்பனப்பள்ளி பள்ளியின் முதல்வா் அன்பழகன், துணை முதல்வா் ஜலஜாக்ஷி, திருப்பத்தூா் பள்ளியின் துணை முதல்வா் பூங்காவனம், நிா்வாக அலுவலா் கெளரிசங்கா், பள்ளியின் பொறுப்பாளா் யுவராஜ், துறை தலைவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT