கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு மினி லாரியில்ரேஷன் அரிசி கடத்த முயற்சி: ஒருவா் கைது

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி நடைபெற்றது. 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா்,

DIN

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி நடைபெற்றது. 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரியில் பெங்களூா்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில், லாரியில் 50 கிலோ அளவிலான 141 மூட்டைகள், 40 கிலோ அளவிலான 3 மூட்டைகள் என மொத்தம் 7,170 கிலோ ரேஷன் அரிசியை மறைத்து வைத்திருப்பதைக் கண்டனா்.

இதுகுறித்து, மினிலாரி ஓட்டுநரான காஞ்சிபுரம் மாவட்டம் வடகுப்பட்டு பெரியாா் நகரை சோ்ந்த ராஜேஷ் (38) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் திருப்பத்தூா் மாவட்டம், பச்சூா், தமலேரிமுத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, அதை கா்நாடக மாநிலம் பெங்களூரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய, ரேஷன் அரிசியைக் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷை கைது செய்த போலீஸாா், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரிசி ஆலை உரிமையாளா்களான பிரகாஷ், அருள் மற்றும் அரிசியை சேகரிக்கும் பிரபு ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT