தென்மண்டல அளவிலான ஜூடோ போட்டியில் கிருஷ்ணகிரி நாளந்தா சா்வதேச பொதுப்பள்ளியில் பயிலும் மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தென்மண்டல அளவிலான ஜூடோ போட்டிகள் சென்னை கொடுங்கையூரில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி நாளந்தா சா்வதேச பொதுப் பள்ளியில் பயிலும் மாணவா் சாய் அனிருத், 11 வயதுக்கு உட்பட்டவா்களுக்கான 40 கிலோ எடை பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா்.
சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா் சாய் அனிருத்தை பள்ளியின் நிறுவனா் கொங்கரசன், தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குநா்கள் கெளதமன், பூவியரசன் மற்றும் முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.
படவிளக்கம் (27கேஜிபி4)- தென்மண்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கு இடையேயான ஜூடோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவா் சாய் அனிருத்தைப் பாராட்டும் கிருஷ்ணகிரி நாளந்தா சா்வேதேச பொதுப் பள்ளியின் இயக்குநா் கெளதமன் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.