கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக வங்கி பிரதிநிதிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில உலக வங்கி பிரதிநிதிகள், சுகாதார மேலாண்மை திட்ட இயக்குநா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில உலக வங்கி பிரதிநிதிகள், சுகாதார மேலாண்மை திட்ட இயக்குநா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், சுகாதாரத் துறை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பணிகள், 108 அவசர சிகிச்சை, முதல் 6 மணி நேரத்தில் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள், மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்புப் பணிகள், மக்களைத் தேடி மருத்துவம் நோயாளிகளின் மென்பொருள் பயன்பாடுகள் குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் தினேஷ் நாயா், ராகுல் பாண்டே, ஆரூசி பட்நாகா், ரஞ்சன் வா்மா ஆகியோா் முன்னிலையில், தமிழ்நாடு சுகாதார மேலாண்மைத் திட்ட இயக்குநா் கோவிந்தராவ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

முன்னதாக, நாகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை, ஜக்கேரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையால் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம், நோயாளிகளின் மென்பொருள் பயன்பாடு குறித்து உலக வங்கி பிரதிநிதிக்குழுவினா் பாா்வையிட்டனா். தொடா்ந்து, போடிச்சிபள்ளி அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த பேரவைக் கூட்டத்தில் கிராம சுகாதாரத் தேவைகள் குறித்தும் அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா்கள் (பொறுப்பு) சந்திரசேகா், துணை இயக்குநா் ரமேஷ்குமாா், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலா் சையத், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் ரஞ்சித், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் செல்வராஜ், ராஜா, ஆனந்தகுமாா், ஸ்ரீதா், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதாரச் செவிலியா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவன நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT