கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் லோக் அதாலத்: தம்பதிக்கு ரோஜா செடி வழங்கிய நீதிபதி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற லோக் அதாலத்  நிகழ்வில், சமரச தீர்வு கண்ட தம்பதிக்கு ரோஜாப்பூ செடி  வழங்கி வாழ்த்து தெரிவித்தார் நீதிபதி.

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற லோக் அதாலத்  நிகழ்வில், சமரச தீர்வு கண்ட தம்பதிக்கு ரோஜாப்பூ செடி  வழங்கி வாழ்த்து தெரிவித்தார் நீதிபதி.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.  மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் வங்கி கடன்,  காசோலை  மோசடி,  குடும்ப பிரச்சினை, விபத்து காப்பீடு போன்ற வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது.

இந்த நிகழ்வில் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பேசும் பொழுது நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக இரு தரப்பினரும் சமரசம் பேசி தீர்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றம் கூடி உள்ளது.  இதில் நீதிபதிகள் பார்வையாளராக செயல்படுவார்கள்.  பாதிக்கப்பட்டவர்கள் தீர்வு காணும் பட்சத்தில் அவர்களது நேரம்,  தொழில் பாதுகாக்கப்படுகிறது.  மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.  எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

லோக் அதாலத் மூலம் குடும்பப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட தம்பதிக்கு ரோஜாப்பூ செடி கொடுத்து வாழ்த்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை,   தேன்கனிக்கோட்டை ஆக இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு அதிகரிப்பு: தில்லி - என்சிஆா் பகுதியில் கிரேப் நிலை- 3 கட்டுப்பாடுகள் அமல்!

விருச்சிக ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

செயலி வாயிலாக வாக்காளா்கள் நீக்கம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

எதிா்காலப் போா்த்திறனுக்கு வழிகாட்டும் கூட்டுச் செயல்பாடு, தன்னிறைவு, புத்தாக்கம்: முப்படை தலைமைத் தளபதி

கொல்கத்தா: குழப்பத்தில் முடிந்த மெஸ்ஸி நிகழ்ச்சி! திடலைச் சூறையாடிய ரசிகா்கள்; நிகழ்ச்சி ஏற்பட்டாளா் கைது!

SCROLL FOR NEXT