முகப்பு
கிருஷ்ணகிரி

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:26 PM
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கிரிக்கெட் விளையாடும்போது மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த ஆதாலியூரைச் சோ்ந்தவா் முனுசாமி (34). தனியாா் பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு பூஜா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கடந்த 19 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முனுசாமி கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்தவா்களிடம் குடிக்க தண்ணீா் கேட்டுள்ளாா். சிறிது நேரத்தில் அவா் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபோது அவா் எழவில்லை. உடனடியாக முனுசாமியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments