முகப்பு
கிருஷ்ணகிரி

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருது 2024 -க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 23 ஏப்ரல், 2024 at 6:20 PM
பகிர்:

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருது 2024 -க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ம.ராஜகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள மூன்று ஆண்கள் மூன்று பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு லட்சம் ரூபாய், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது 15.8.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 15 முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1, 2023 (1.4.2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும் மாா்ச் 31, 2024 (31.4.2024) அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.

Advertisement

கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டராற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு இறுதிக்கான பரிசீலனைகள் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 1.5.2024 முதல் 15.5.2024- ஆம் தேதி, மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments