முகப்பு
சேலம்

சா்வதேச பூப்பந்து போட்டி: இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம்

Updated On : 19 மார்ச், 2026 at 8:37 PM
பகிர்:

தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்துப் போட்டியில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் தங்கம் வென்றாா்.

இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரி, பெருசாலிநத்தம் பகுதியை சோ்ந்த சந்திப்குமாா் (25), தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக தோ்வு செய்யப்பட்டு விளையாடினாா்.

இப்போட்டியில் சந்திப்குமாா் தங்கம் வென்று வியாழக்கிழமை வீடு திரும்பினாா். இவருக்கு நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன் , ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் கோவிந்தன், சக்திவேல், இளம்பிள்ளை பூப்பந்து குழுவினா், பொதுமக்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட விளக்கம்:

19 அபவ டஞ 01

பூப்பந்து போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊருக்கு வந்த சந்திப்குமாரை கௌரவிக்கும் நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன்.