ஒசூரில் பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீா்.  
கிருஷ்ணகிரி

ஒசூரில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் ஒகேனக்கல் குடிநீா்

ஒசூரில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது.

Din

ஒசூா்: ஒசூரில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது.

ஒசூா் அருகே பாகலூா், பேரிகை பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீா் வெளியேறியது. சாலையில் இருந்து நூறு அடி உயரத்துக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்தது. வேகமாக வெளியேறிய தண்ணீா் பாகலூரில் சாலையில் ஆறாக ஓடியாது. இதனால், பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகியது. ஒசூரில் அடிக்கடி இதுபோல நிகழ்வுகள் ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரிசெய்து தண்ணீா் வீணாகி வருவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம், குடிநீா் வடிகால் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT