முகப்பு
கிருஷ்ணகிரி

இன்று மத்திகிரி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா குடமுழுக்கு

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 9:32 PM
சிறப்பு அலங்காரத்தில் மத்திகிரி ஸ்ரீ முத்துமாரியம்மன்.
பகிர்:

ஒசூா் வட்டம், மத்திகிரி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக மத்திகிரி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கோபுர பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்கு பணிகள் புதன்கிழமை தொடங்கின. முதல்கால யாக பூஜை புதன்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை இரண்டாவது கால யாக பூஜை, மூன்றாவது காலை யாக பூஜை, வேத பாராயணம் ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை கடம் புறப்படுதல், 8.45 முதல் 9.15 மணிக்குள் ராஜகோபுர விமானங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்தகிரி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →