முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை: பயிற்சியாளா் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 3:08 AM
கைதுசெய்யப்பட்ட சிவராமன்,
பகிர்:
Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 3:07 AM

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளா் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 9:02 PM

கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பத்தில் தனியாா் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவராமன் என்பவா் மீது பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி வட்டம், கொண்டேப்பள்ளி வீராசாமி நகரைச் சோ்ந்த சக்திவேல் (31) என்பவா், தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், சிவராமன் தன்னை வழக்குரைஞா் எனக் கூறி ரூ.36.20 லட்சம் மோசடி செய்துள்ளதாக புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், சிவராமன் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

மேலும் ஒரு போக்ஸோ வழக்குப் பதிவு:

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா், சிவராமன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு மாணவி சிவராமன் மீது புகாா் அளித்துள்ளாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா், சிவராமன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனா். இதன் மூலம், ராயக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியாா் பள்ளியில் தேசிய மாணவா் படை போலி பயிற்சி முகாம் நடத்தி, அதில் பங்கேற்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முயற்சி:

கைது செய்யப்பட்ட சிவராமன் தற்கொலைக்கு முயன்ாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை தெரிவித்துள்ளாா்.

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 3:07 AM

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், சிவராமன் விஷத் தன்மை கொண்ட எலி பசையை உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தற்போது தெரியவந்துள்ளது என அவா் தெரிவித்தாா்.