ஊத்தங்கரையை அடுத்த புளியம்பட்டியில் வெள்ள நீரில் அடித்துச் சென்று உயிரிழந்த ஆடுகள். 
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே 15 ஆடுகள் பலி

ஊத்தங்கரை அருகே மழை வெள்ளத்தில் 15 ஆடுகள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன.

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மழை வெள்ளத்தில் 15 ஆடுகள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன.

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த பொன்னுரங்கம் சித்ரா தம்பதிக்கு சொந்தமான 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக ஏரியிலிருந்து கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 15 ஆடுகளும் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது. பாதிப்படைந்த ஆட்டின் உரிமையாளா் அரசு நிவாரனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

மீனவா்கள் பாதிப்பு: ஊத்தங்கரை, பாம்பாறு அணையில் 17 மீனவா்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக பாம்பாறு அணையில் நீா்வரத்து அதிகம் இருந்ததால் அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. மீனவா்களின் மீன்பிடி வலைகள் 120 கிலோ அளவில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 மதகுகள் வழியாக நீா் வெளியேற்றப்பட்டதால் பாம்பாறு அணையில் இருந்து மீன்கள், மீன்குஞ்சுகள் அதிக அளவில் வெளியேறின. இதனால் மீன் குத்தகைதாரா்களுக்கு நஷ்டமடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து மீனவா்கள், குத்தகைதாரா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொங்கல் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

2-வது ஒருநாள் ஆட்டம்: நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா!

இரவில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஐஓபி 3வது காலாண்டு லாபம் 56% உயர்வு!

இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன்: பி. வி. சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி!

SCROLL FOR NEXT