முகப்பு
கிருஷ்ணகிரி

குழியில் தவறி விழுந்த காவலா் படுகாயம்

சூளகிரி அருகே குழியில் தவறி விழுந்த காவலா் படுகாயம் அடைந்தாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:28 AM
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 7:55 PM

சூளகிரி அருகே குழியில் தவறி விழுந்த காவலா் படுகாயம் அடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெல்லன்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரவி (41). இவா் சூளகிரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுண்டகிரி அருகே இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் சாலையை கடக்க முயன்ற போது குழியில் தவறி விழுந்தாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:28 AM

இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement