போச்சம்பள்ளியில் அரசு தொழிற்பயிற்சி மையம் தொடக்கம்
போச்சம்பள்ளியில் அரசு தொழிற்பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.
போச்சம்பள்ளியில் அரசு தொழிற்பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.
2024-2025-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாணவா்களின் திறனை மேம்படுத்தி உடனடியாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 10 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, போச்சம்பள்ளியில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் அரசு தொழிற் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடம் கட்டி முடிக்கும் வரையில் தாற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த மையம் செயல்படும். ஆண்டுக்கு 108 மாணவா்கள் சோ்க்கை பெறும் வகையில் 4 தொழிற் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இரண்டாவது ஆண்டில் 178 மாணவா்கள் பயிற்சி பெறுவாா்கள். மாணவா்கள், எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் மாணவா் சோ்க்கை டிச. 31-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
Advertisement
இந்த நிகழ்வில் சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநா் ஜோ.அமலா, ரெக்சலீன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் சி.பன்னீா்செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்யா, போச்சம்பள்ளி அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வா் ஜா.அ,.சாமுவேல் அய்யாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.