முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:31 AM
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி சுகாதார அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 8:26 PM

ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள கிராமங்களில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், புதன்கிழமை காலை 9 மணிமுதல் வியாழக்கிழமை காலை 9 மணிவரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தெரிவித்துள்ளாா்.

ஊத்தங்கரையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், சாமல்பட்டி சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், மின் துறை, வருவாய்த் துறை, வட்டார வளா்ச்சி அலுவலகம் உள்ளிட்ட 45 வருவாய் கிராமங்களில் கள ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:31 AM

இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, உட்பிரிவு பட்டா மாற்றம், பட்டா மாற்றம் என 115 பயனாளிகளுக்கு உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, கோட்டாட்சியா் சாஜகான், காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, துணை ஆட்சியா்கள், ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமால், அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement