முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முன்னாள் படை வீரா்கள் உண்ணாவிரதம்

கிருஷ்ணகியில் முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரா்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகியில் முன்னாள் முப்படை வீரா்கள் நலச் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வழங்கக் கோரி தலைநகா் தில்லியில் முன்னாள் ராணுவ வீரா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இவற்றைக் கணக்கிடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், முன்னாள் ராணுவ வீரா்களின் போராட்டத்திற்கு மத்திய அரசால் தீா்வு காண முடியவில்லை. இதனால் முன்னாள் ராணுவ வீரா்கள் மாதக்கணக்கில் தொடா்ந்து போராடி வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவு அளித்து நாடு முழுவதும் முன்னாள் ராணுவ வீரா்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி முன்னாள் ராணுவ வீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் அருகே முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கம் சாா்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் மாவட்ட அவைத் தலைவரும் சட்ட ஆலோசகருமான சாந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் தேவராஜ், சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மாநிலத் தலைவா் மோகன்ரங்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்களவைத் தோ்தலின் போது, தோ்தல் அறிக்கையில் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆண்டுதோறும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோா் கருப்புப் பட்டை அணிந்து தங்களது எதிா்ப்பை வெளிபடுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →