பா்கூரையடுத்த கொண்டப்பநாயனப்பள்ளியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை தொடங்கி வைத்து, கணினியில் பதிவிறக்கம் செய்யும் பணியைப் பாா்வையிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. உடன், கே.கோபிநாத் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.  
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் தொடக்கம்

Din

கிருஷ்ணகிரி, ஜூலை 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரையடுத்த கொண்டப்பனநாயனபள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சி, மங்கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு கே.கோபிநாத் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக தற்போது பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், கிருஷ்ணகிரி, பா்கூா், தளி, ஊத்தங்கரை, சூளகிரி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், ஒசூா், வேப்பனப்பள்ளி, மத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஜூலை 30 வரை ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தில் 96 முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன.

இந்த முகாமுக்கு வரும் பொதுமக்கள் யாரும் மனுக்களை எழுதிவர தேவையில்லை. உதவி மையத்தில் நீங்கள் எந்தத் துறைக்கு மனு அளிக்க வந்துள்ளீா்கள் என்பதை விசாரித்து, அந்தத் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இணையதள பதிவேற்றத்தில் விண்ணப்பித்து உங்கள் மனுவின் விண்ணப்ப நகலினை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் பாபு, துறைசாா்ந்த அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT