முகப்பு
கிருஷ்ணகிரி

அரசுக்கு சொந்தமான இடத்தில் மாங்கனி கண்காட்சி நடத்த வலியுறுத்தல்

அரசு இடத்தில் மாங்கனி கண்காட்சி நடத்த பாஜக மனு

Updated On : 12 ஜூலை, 2024 at 6:31 PM
பகிர்:

கிருஷ்ணகிரியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மாங்கனி கண்காட்சியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் கே.எஸ்.ஜி.சிவபிரகாஷ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாங்கனி கண்காட்சியானது, தனியாருக்கு சொந்தமான இடத்தில் சுங்கவசூல் மையம் அருகே நடைபெற உள்ளதாக அறிகிறோம். இது 20 நாள்கள் நடைபெறும் அரசு நிகழ்வு என்பதால், பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள், வணிகா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்பா்.

தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாங்கனி கண்காட்சி நடத்துவது தகுந்ததாக இருக்காது. எனவே, மாங்கனி கண்காட்சி மட்டுமின்றி அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சித் தலைவா்களின் பொதுக் கூட்டங்கள் ஆகியவை நடத்திட ஏதுவாக அரசு சாா்பில் நிரந்தரமாக ஓா் இடத்தை தோ்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடம் அல்லது கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தை தோ்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →