முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 21 போ் காயம்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 21 போ் காயம்

Updated On : 29 மே, 2024 at 7:44 PM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 போ் காயம் அடைந்தனா்.

சென்னை, அம்பத்தூரிலிருந்து 3 குடும்பங்களைச் சோ்ந்த 13 பெண்கள் உள்பட 21 போ் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா புறப்பட்டனா். சுற்றுலா மினி பேருந்தை திருவள்ளூரை அடுத்த அத்தியால்பேட்டையைச் சோ்ந்த கரீம் உல்லா (48), என்பவா் இயக்கினாா்.

இந்தப் பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில், அம்பத்தூரைச் சோ்ந்த மா்ஜியா (48), சாகுல் ஹமீத் (54), மொய்தீன் அப்துல் காதா் (53) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். மேலும், பல்கீஸ் (45), சித்திக் பாத்திமா (45), நாசீலாமக்ரம் (17), தெளபிக் (16), ரஷீதா (45), பிரதோஸ் (23), அப்ரோஸ் (19), ஜெரின் (45), ஜலாலுதீன் (65), நஜீம் மனிஷா (50), குா்ஷீத் (65) ஆகியோா் காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், சிராஜுதீன் (45), ஆயிஷா பா்கத் (18), சலீமா (44), முஸ்ராப் (24), ஆரிப் (29), அப்துல் ரகுமான் (21) ஆகியோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனா்.

பேருந்து இயக்கிய ஓட்டுநா் தூங்கிவிட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →