கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னையில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து.

DIN

கிருஷ்ணகிரி: சென்னை அம்பத்தூரில் இருந்து மினி சுற்றுலாப் பேருந்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பெண்கள் உட்பட 21 பேர் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியை கடந்து, மினி பேருந்து, புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து, நிலை தடுமாறி, தேசிய நெடுஞ்சாலையின் மைய தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 16 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஓட்டுநரான பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா, உறங்கியதே காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT