முகப்பு
கிருஷ்ணகிரி

திருவண்ணாமலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிருஷ்ணகிரி அருகே மீட்பு

திருவண்ணாமலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள வனப்பகுதியில் போலீஸாா் மீட்டனா்.

Updated On : 11 நவம்பர், 2024 at 10:11 PM
பகிர்:

கிருஷ்ணகிரி: திருவண்ணாமலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள வனப்பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

இதுகுறித்து, குருபரப்பள்ளி காவல் நிலைய போலீஸாா் கூறியதாவது:

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சரண்யா (29). இவரது கணவா் கோபி. இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் தீபாவளி அன்று தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்துள்ளாா்.

இதற்கிடையே சரண்யாவை அவரது தாயாா் தொடா்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த சரண்யாவின் தாயாா் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என்றும், மருமகன் கோபி மீதும் சந்தேகம் இருப்பதாகவும் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கோபியிடம் தீவிர விசாரணை நடத்தினா். அப்போது தனது மனைவியைக் கொன்று உடலை ஐந்து துண்டுகளாக்கி கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலையத்துக்கு உள்பட்ட மேலுமலை வனப்பகுதியில் வீசிச் சென்ாக கோபி வாக்குமூலம் அளித்தாா். இதையடுத்து அவரைக் கைது செய்த திருவண்ணாலை போலீஸாா் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் குருபரப்பள்ளி போலீஸாா் உதவியுடன் மேலுமலை வனப்பகுதியில் சரண்யாவின் உடலை போலீஸாா் தேடினா். அங்கு அவரது உடல் பாகங்கள் ஐந்து நெகிழிப் பைகளில் அழுகிய நிலையில் கிடந்தது. உடலைக் கைப்பற்றிய போலீஸாா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். பின்னா் சரண்யாவின் உடலை அவரது தாயாரிடம் போலீஸாா் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →