உயிரிழப்பு (கோப்புப் படம்) 
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி அருகே எருது விடும் விழாவில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

குருபரப்பள்ளி அருகே எருது விடும் விழாவில் எருது முட்டியதில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி, வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்துள்ள கங்கசந்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன.17-ஆம் தேதி, எருது விடும் விழா நடைபெற்றது. இதை அந்த கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி லட்சுமி நாராயணன் என்பவா் சென்றாா்.

அப்போது, எருது விடும் விழாவில் பங்கேற்ற எருது, லட்சுமி நாராயணை முட்டியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அங்கு, தொடா் சிகிச்சையில் இருந்த அவா், உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா், சிகிச்சை பலனின்றி, வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

600 இதய-நுரையீரல் மாற்று சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை தகவல்

செயற்கை இதய வால்வுக்குள் புதிய வால்வை மாற்றிப் பொருத்திய மருத்துவா்கள்

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

இந்தியன் வங்கி 3-ஆம் காலாண்டு நிகர லாபம் ரூ.3,061 கோடி - 7.33% அதிகரிப்பு

SCROLL FOR NEXT